நயன்தாராவை அடுத்து அஞ்சலியை பேன்டஸி காமெடி பின்னணியில் உருவாகும் படத்தில் ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகி பாபு . இந்தப் படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார். சினிஷ், இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
படத்தில் பேஸ்கட்பால் பயிற்சியாளராக அஞ்சலி நடிக்க, அவரை காதலிக்கும் கேரக்டரில் யோகி பாபு நடிக்கிறார்.
செப்டம்பர் மாத துவக்கத்தில் தொடங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் இந்தியாவைச் சுற்றியுள்ள மலைப் பிரதேசங்களிலும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.