சென்னை

யாரிப்பாளர் சங்கம் நேற்று முன் தினம் வெளியிட்ட விமர்சனம் குறித்த அறிக்கை சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று முன் தினம் ஒருஅறிக்கையை வெளியிட்டது. இதில் முதல் அம்சமாக பத்திரிகையாளர்களுக்கு பிரத்தியேக திரையிடுதல் பற்றி தயாரிப்பாளர்களுக்கு விளக்கங்கள் இடம் பெற்றிருந்தது. இரண்டாம் அம்சம் திரைப்படத்துக்கான விளம்பர நிகழ்ச்சிகளின் செலவு குறித்ததாகும்.

இதில் மூன்றாவது அம்சம் மிகவும் முக்கியமானதாகும்.   திரைப்பட விமர்சனம் என்னும் பெயரில் பலர் நடிகர்கள், தயாரிபாளர்கள் மற்றும் இயக்குனர்களை தாக்கி எல்லை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் அவர்கள் திரைப்படம் குறித்து எந்த ஒரு நிகழ்வுக்கும் அழைக்கப்பட மாட்டர்கள் என்பதும் அந்த மூன்றாம் அம்சமாகும்

டைமண்ட் பாபு

இது குறித்து மூத்த மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, “இந்த எச்சரிக்கை அச்சு ஊடகங்களுக்கு அல்ல. வேறு யார் யாரோ திரை விமர்சனம் எழுதி வருகின்றனர். அவர்களால் பலர் மனம் புண்படுகிறது. அவர்கள் விமர்சனம் என்னும் பெயரில் பலரை திரைப்படம் எடுப்பது என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் என்பது போன்ற கருத்துக்களை கூறுகின்றனர். அவர்களுக்காக இந்த எச்சரிக்கை ஆகும்.

இந்த பிரச்சினை முழுக்க யு டியூப் மூலம் விமர்சனம் செய்பவர்கலால் உருவாகிறது. பொதுவாக அச்சில் வரும் விமர்சனங்கள் கடுமையமாயக இருப்பதில்லை. ஆனல் யு டியுப் விமர்சகர்கள் அதைப் போல் விமர்சனம் அளிப்பதில்லை. அதுவும் குறிப்பாக யூ டியுப் பிரபல விமர்சகரான புளூ சட்டை மாறன் என்பவர் தமிழ் டாக்கிஸ் என்னும் சேனலில் விமர்சனம் செய்கிறார். அவருக்காக இந்த எச்சரிக்கை இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து யு டியூப் விமர்சகர் ஒருவர், “நான் சந்தையில் வாங்கும் பொருள் எனக்கு பிடித்திருந்தால் அதை பாராட்டுவேன். நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை எனத்  தான் சொல்வேன், நான் திரைப்படங்களின் வாடிக்கையாளராக எனது கருத்தை சொல்கிறேன். உண்மையில் இணைய தள ஊடகங்களின் வளர்ச்சி திரைப்பட தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை.

என்னை பொறுத்தவரை நான் சொல்வதற்கு மட்டுமே பொறுப்பு ஏற்க முடியும். அதை மற்றவர்கள் தவறாக புரிந்துக் கொண்டால் நான் பொறுப்பேற்க முடியாது. எனது சேனல் சந்தாதாரர்களுக்கு நான் உண்மையாக நடந்துக் கொள்ள வேண்டியது எனது தொழில் தர்மமாகும்.” என கூறி உள்ளார்.

எஸ் ஆர் பிரபு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, “தற்போழுது விமர்சனம் செய்வது ஒரு வியாபாரமாகி விட்டது. அந்த வியாபாரத்தை நியாயமாக நடத்த வேண்டும். ஒரு தயாரிப்பாளராக எனது பொருளை பயன்படுத்தி பிறர் லாபம் சம்பாதிப்பதை நான் பெரியதாக எண்ணுவதில்லை. அதே நேரத்தில் தவறாக சித்தரித்து எனது வியாபாரத்தை கெடுப்பதை தடுக்க கூடாதா? இவ்வாறான சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானதா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்” என கூறி உள்ளார்.

மற்றொரு யு டியுப் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, “என்னை பொறுத்த வரை சட்ட நடவடிக்கை என்பது அதிக பட்சம் என தோன்றுகிறது. திரைப்படமென்பது பொதுமக்களுக்கான பொருள் தானே தவிர தனியார் சொத்து கிடையாது. நான் எனது பணத்தை கொடுத்து டிக்கட் வாங்கி படம் பார்க்கிறேன். என் கருத்துக்களை சொல்கிறேன்.

ஆனால் எனது கருத்துக்களுக்கு இரு விதமான விளைவுகள் உள்ளன.

ஒரு தரப்பினர் எனது விமர்சனங்களை எதிர்க்கும் தயாரிப்பாளர்களாக உள்ளனர். மற்றொரு தரப்பினர் எனது விமர்சனங்களில் விளம்பரம் அளிக்கின்றார்கள். இது ஒரு விதமான குழப்பத்தை உண்டாக்குகிறது. ஒரு தயாரிப்பாளர் எனது விமர்சனத்தில் விளம்பரம் அளிக்கிறார் என்றால் அவர் அதை ஒப்புக் கொண்டதாக தான் பொருள்” என கூறி உள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர் டி சிவா, “பல விமர்சகர்கள் அவர்களுக்கு பணம் தரவில்லை எனில் மோசமாக விமர்சிப்போம் என மிரட்டுகின்றனர். அவர்களுக்கு விளம்பரம் அளிப்பதன் மூலம் இந்த பணத்தை அளிக்க வேண்டும். எனவே நாம் இந்த யு டியூப் விமர்சகர்களை கண்டு கொள்ள தேவையில்லை. உண்மையில் இவர்களால் திரைத்துறைக்கு எவ்வித ஆதாயமும் கிடையது.

இவர்கள் திரைப்படத்தை விமர்சிப்பது போல் ஒரு சோப் அல்லது ஷாம்புவை விமர்சித்தால் அந்த நிறுவனம் அமைதியாக இருக்குமா? ஒரு அடிப்படை தர்மம் இல்லாமல் விமர்சனத்தில் அவன் இவன் என்னும் வார்த்தை பிரயோகங்கள் அதிகமாக உள்ளது. இவற்றை யாராலும் ஏற்க முடியாது” என கூறுகிறார்.

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், “அந்தந்த நபரின் தனிப்பட்ட கண்ணியத்தை பொறுத்து அவருடைய பேச்சு இருக்கும். இது குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய இயலாது. விமர்சகர்கள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறாக பேசினால் மட்டுமே வழக்கு தொடர முடியும். அப்போதும் அந்த சொல்லப்பட்ட விஷயம் உண்மையாக இருக்க வேண்டும்” என விளக்கம் அளித்துள்ளர்.

அதே நேரத்தில் டைமண்ட் பாபு தெரிவித்ததை போல் ஒரு படத்துக்கு எத்தகைய விமர்சனம் கிடைத்தாலும் முதல் மூன்று நாட்களுக்கு அந்த படம் திரையரங்கில் ஓடுவதை வைத்து மட்டுமே அந்த திரைப்படத்தின் தலையெழுத்து முடிவாகும் என்பதே உண்மை ஆகும்.

THANX : THE HINDU