கோலிவுட்டை அலறவைத்த ’அனிதா பத்மா பிருந்தா’ நாவல் படமாகிறது….!

Must read

தமிழ் சினிமாவில் பல கசப்பான மறைக்கப்பட்ட உண்மைகளையும், அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது ஏ.எல்.சூர்யா என்ற இளைஞர் எழுதிய ’அனிதா பத்மா பிருந்தா’ நாவல்.

தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த நாவல் தற்போது திரைப்படமாகிறது. இதை எழுதிய ஏ.எல்.சூர்யாவே இப்படத்தை எழுதி இயக்குவதோடு, இசையமைத்து ஹீரோவாக நடித்து தயாரிக்கவும் செய்கிறார்.

ஏற்கனவே இவரது ’அனிதா பத்மா பிருந்தா’ நாவல் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அது திரைப்படமாக உருவாகும் போது, இந்திய சினிமா அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பி பாசிட்டிவ் என்ற தனது யூடியூப் சேனல் மூலம் இவர் வெளியிட்டிருக்கும் சுமார் 200 க்கும் மேற்பட்ட வீட்டியோக்கள் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் பல லட்சங்களாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article