சென்னை ,

மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிக்கிறது என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தலித் மாணவி அனிதா பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ படிப்புகளுக்காக மத்திய அரசு நடத்திய நீட் தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் அவருடயை மருத்துவர் கனவு பறிபோனது.

இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான தலித் மாணவி அனிதா இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவி மரணம் குறித்து, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என கடைசிவரை தமிழக மக்களை ஏமாற்றி வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவத,

ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும்.  பல மாணவர்கள் இதுபோன்று தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

ஆனால்,  மாணவி அனிதா தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அவரின் தற்கொலை வேதனை அளிக்கிறது. மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.