அனிதா

நீட் குளறுபடிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய மாணவி அனிதா, விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில், “அனிதா தற்கொலை செய்துகொண்டது அவரது தலைவிதி” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் தேரிய மகளிர் ஆணையத்தின் தலைவர்  லலிதா குமாரமங்கலம்.

தனியார் தமிழ்த்  தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த லலிதா குமாரமங்கலத்திடம், “நீட் கட்டாயம் என்று அறித்தததால் ல் அனிதா என்கிற மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கிறாரே.. அவரது மரணம் குறித்து தானாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்குமா” என்று கேட்கப்பட்டது.

லலிதா குமாரமங்கலம்

அதற்கு லலிதா குமாரமங்கலம், “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் நீட் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இது குறித்து மகளிர் ஆணையம் விசாரிக்க முடியாது” என்றார்.

மேலும், “வ்வொருவர் தலையிலும் ஒவ்வொன்று எழுதியிருக்கு.. நல்லா படிச்சுட்டு வந்தா நல்ல படிப்பில் சேர்ந்திருக்கலாம்..” என்றும் தெரிவித்தார்.

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து அவர் தெரிவிக்கையில், “இந்த கொலை குறித்து உடனடியாக அந்த மாநில அரசு மற்றும் டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.