பவர் ஸ்டார் மூலம் டோலிவுட்டில் கால் பதிக்கும் அனிரூத்..!

Must read

aniruth
ஒய் திஸ் கொலவெரி என்ற பாடல் மூலம் உலக புகழ் பெற்றவர் இசையமைப்பாளர் அனிரூத். இவர் அந்த பாடலை அமைத்த பின்னர் இசை அமைத்த அனைத்து படங்களும் கண்டிப்பாக ஹிட் அடித்துவிடும் அந்த அளவுக்கு இவரின் இசையை இளைஞர்கள் விரும்பி கேட்கின்றனர்.
தற்போது இவர் தெலுங்கில் முதல் முறையாக ஒரு படத்துக்கு இசையமைக்கவுள்ளார், அது என்ன படம் என்றால் டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 25வது படத்தில் தான் இவர் இசையமைப்பாளராக புக் செய்யப்பட்டுள்ளார். இந்த திரைப்படத்தின் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தான்.
பவன் கல்யாண் த்ரிவிக்ரம் கூட்டணியில் இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது, அது மட்டுமல்ல பவனின் 25வது படம் என்பதனால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது.
ஆல் தி பெஸ்ட் அனிரூத்..

More articles

Latest article