பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி

Must read

புதுடெல்லி:
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விலங்குகள் சோதனை வெற்றி அடைந்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் விலங்குகளின் மீது செலுத்திய சோதனையில் வெற்றி அடைந்துள்ளது.
நேரடி சோதனை மாதிரிகள் மூலம் தடுப்பூசியின் செயல்திறன் முடிவுகள் வெளியாகியதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவாக்சினை விலங்குகள் மீது செலுத்தியதில் அதன் ஆய்வுமுடிவுகள், தடுப்பூசியின் செயல்திறனை நிரூபிக்கின்றன என்று பாரத் பயோடெக் பெருமையாக தெரிவித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான  கோவெக்சினை விலங்குகள் மீது செலுத்தியதில், அவைகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது, மேலும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற எந்த பாதிப்புகளும் நேரிடாமல் இருக்கிறது. ஆகவே இந்த மருந்துகள் மனிதர்களுக்கும் நான்கு வேலை செய்யும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசியான கோவெக்சினின், இரண்டாம் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்த மருந்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article