மும்பை: காவல்துறையிடமே மாதம் ரூ.100கோடி மாமூல் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி, அதனால் பதவி இழந்து, தற்போது கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அனில்தேஷ்முக் 27 போலி நிறுவனங்களை நடத்தி வந்துள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்துள்ள புகார் பட்டியலில் கூறப்பட்டு உள்ளது.. இது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநில முன்னாள்அமைச்சர் அனில்தேஷ்முக் மீது முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர்சிங் ரூ.100கோடி ஊழல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதனைதொடர்ந்து, மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அனில் தேஷ்முக் மீது சிபிஐ எப்.ஐ.ஆர்.பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கு குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஏதும் கூறாத நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் நீதிமன்றத்தின் நெருக்குதல் காரணமாக அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து,. சிபிஐயின் எப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை அனில் தேஷ்முக் மீது பண பரிவர்த்தனை மோசடியில் தனி எப்.ஐ.ஆர்.பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து, அனில்தேஷ்முக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், அனில் தேஷ்முக்கின் தனி செயலாளர் சஞ்சய் பாலண்டே(51) மற்றும் தனி உதவியாளர் குந்தன் ஷிந்தே ஆகியோரையும் தூக்கி அதிரடி விசாரணை நடத்தியது. இதில் அனில் தேஷ்மீதான பல புகார்கள் உறுதி செய்யப் பட்டன.
இதையடுத்து, விசாரணைக்கு அஜராக அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத துறை சம்மன் அனுப்பி யது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான நிலையில், சம்மனை ரத்து செய்ய மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி அனில் தேஷ்முக் கடந்த விசாரணைக் காக பலார்ட் பியரில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் 1ந்தேதி 11.30 மணிக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 12மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தி, கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றச்சாட்டு பட்டியிலில், முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மாமூல் வசூலித்து வந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும், பார்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் அனில் தேஷ்முக் ரூ.4.70 கோடி வசூல் செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மாமூல் வசூலிக்கு உதவியாக, வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி போலீஸ் இன்ஸ் பெக்டர் சச்சின் வஷே இருந்தாகவும், வசூலாகும் மாமூல் பணத்ரதை தனது உதவியாளரான குந்தன் ஷிந்தே மற்றும் சஞ்சய் பாலாண்டே ஆகியோர் மூலம் சச்சின் வாஷே அனில் தேஷ்முக்கிடம் கொடுத்தார்.அவர் மூலம் இந்த பணத்தை அப்போது அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மாமூலாக வசூலாகும் பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறியிருப்பது டன், ரூ.4.18 கோடியை போலி கம்பெனிகள் மூலம் நாக்பூரில் உள்ள ஒரு கல்வி அறக்கட்டளை யின் கணக்கில் நன்கொடை என்ற பெயரில் அனில் தேஷ்முக் டெபாசிட் செய்தார். ஆனால், இந்த கல்வி அறக்கட்டளை அனில் தேஷ்முக் மற்றும் அவரது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மேலும் முறைகேடாக கிடைக்கும் பணத்தை, வெள்ளையாகும் முயற்சிக்காக, 27 போலி நிறுவனங் களை தொடங்கி அதன்மூலம் மாமூல் பணத்தை கைமாற்றி வந்துள்ளார். இந்த 27 போலி கம்பெனி களில் 13 கம்பெனிகள் அனில் தேஷ்முக்கின் பெயரிலும், 14 கம்பெனிகள் அனில் தேஷ்முக்கின் உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் பெயர்களிலும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மும்பை ஒர்லி பகுதியில் அனில் தேஷ்முக்கின் மனைவி ஆர்த்தி பெயரில் ஒரு வீடு உள்ளது. இந்த வீடு 2004ம் ஆண்டு முழு பணம் கொடுத்து வாங்கப்பட்டது. ஆனால், முன்னதாக 2002ம் ஆண்டு அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்த போது இந்த வீடு அவர் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்ட்டு உள்ளது என கூறியுள்ளது.
இதையடுத்து, அனில் தேஷ்முக்கை 6ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் மகாராஷ்டிரா மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.