ங்காடிமங்கலம் அய்யனார் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இடம் பெற்றுள்ளது.

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலம். இச்சிவாலயத்தின் மூலவர் அக்கினீசுவரர். இவர் தீயாடியப்பர் என்றும் அறியப்படுகிறார். அம்பாள் சௌந்தரநாயகி என்றும் அழகமர்மங்கை என்றும் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஒன்பதாவது சிவத்தலமாகும்.

இத்தலத்தில் முற்கால சோழர் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுக்களில் அம்மன் பெயர் அழகமர்மங்கை எனக் குறிக்கப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் நான்கு கால நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் கும்பாபிஷேகம் 1983 ம் ஆண்டில் நடைபெற்றுள்ளது. முதலாம் ஆதித்திய சோழனின் காலத்திய கலைப்பாணியை பெற்று விளங்குகிறது.