குண்டூர்: சர்ச்சையை உள்ளான ஜின்னா டவரில் ‘தேசிய கொடி’ வண்ண பெயிண்ட் பூசப்பட்டடது. குண்டூர் மாநகராட்சி இதற்கான நடவடிக்கை மேற்கொண்டது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நகரின் முக்கிய பகுதியில் ஜின்னா டவர் என்ற நினைவுச்சின்னம் உள்ளது. இஸ்லாமிய சமுகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி யாக முகம்மது அலி ஜின்னால  அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்தவர். இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில்,  நாடு இரண்டாக பிரிக்கப்பட்டபோது, ஜின்னா பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார்.  இதனால், அவர் பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தன்று குண்டூரில் இருந்த ஜின்னா டவரில் இந்து வாஹினி அமைப்பை சேர்ந்த சிலர் இந்திய தேசிய கொடி ஏற்ற முற்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்துஅங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் அங்கிருந்து அகற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தனர்.

இதையடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  ஜின்னா டவரில் குண்டூர் மாநகராட்சி சார்பில் ’தேசிய கொடி’ வண்ண பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த அந்த தொகு எம்எல்ஏ முகமது முஸ்தபா, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைபடி ஜின்னா டவர் தேசிய கொடியின் வண்ண பெயிண்ட் பூசப்பட்டது என்று கூறியுள்ளார்.