தராபாத்

றைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் புகழ்ந்துள்ளார்

இன்று அதிமுக நிறுவனத் தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் , எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் அவரை மிகவும் புகழ்ந்து வருகின்றனர்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில்,

”தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர், பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் , தமிழ் சினிமாவை பாமரர்களின் ஊடகமாக்கிய புரட்சி நடிகராவார்.

புரட்சித்தலைவரின் 108வது பிறந்தநாளில் தொலைநோக்கு கொண்ட அவரது தனித்துவமான நிர்வாகத்திறனையும், மக்களின் மேம்பாட்டின் மீது அவர் கொண்டிருந்த மாறாப்பற்றையும் எண்ணி வியக்கிறேன்.

மக்கள் பணியில் அவர் என்றும் எமது பேராசானாக, வழிகாட்டி நிற்கிறார்.

ஓங்குக புரட்சித் தலைவரின் புகழ்”

என்று பதிவிட்டுள்ளார் .