மராவதி

மீபத்தில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய நிதிஷ் ரெட்டிக்கு ஆன்ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 25 லட்சம் பரிசளித்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டி இந்திய அணியில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்துள்ளார்.  இவர் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்து. அதிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டராக 5 போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை பெற்று பேட்டிங்கில் அவர் மொத்தமாக 298 ரன்கள் குவித்தார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 114 ரன்கள் அடித்து அசத்தியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிதிஷ் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து  வாழ்த்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் நிதிஷ் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையை வழங்கியுள்ளார்.