நோட்டு பிரச்சனை: வங்கி அதிகாரிகளை வறுத்தெடுத்த சந்திரபாபு நாயுடு

Must read

ஆந்திராவில் நோட்டுப் பிரச்சனையினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சமாளிக்க முடியாமல் சந்திரபாபு நாயுடு அரசு திணறி வருகிறது. இந்நிலையில் வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் நிலமையை புரிந்து கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக அவர்களை அழைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டித்திருக்கிறார்.

naidu

நோட்டு தடைக்கு பின்னர் நிலைமையை சமாளிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கடி வங்கி அதிகாரிகளுக்கு ரிவியூ மீட்டிங்குகள் நடத்தி வந்தார். அதில் மக்களின் துயரை போக்க சனி, ஞாயிறுகளில் வேலை செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் வங்கியின் வங்கிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் ரிவியூ மீட்டிங்குகளில் கலந்து கொள்ளவில்லை. தங்களுக்கு பதிலாக தங்கள் பிரதிநிதிகளை மட்டும் அனுப்பி வந்தனர்.
முதலமைச்சர் எல்லை மீறி செயல்படுவதாகவும். தாங்கள் ரிசர்வ் வங்கி மற்றும் தங்கள் சொந்த வங்கிகளின் நிர்வாகத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். முதல்வர் எங்களுக்கு ஆணையிட முடியாது என்று அவர்கள் கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.
முதல்வர் கேட்டுக்கொண்டபடி வங்கிகள் சனி, ஞாயிறுகளில் செயல்படவில்லை. அதனால் கோபமடைந்த சந்திரபாபு நாயுடு, “பொது மக்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள், இதை என்னால் சகித்துக்கொள்ளா முடியாது. பின் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று வங்கி அதிகாரிகளையும் ஊழியர்களையும் எச்சரித்தார்.

More articles

Latest article