டப்பா

ந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள ஒண்டிமிட்டா பகுதியின் ராமர் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் சூறாவளி மழையால் பந்தல் சரிந்து 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் பிரியும் முன்பு ஒவ்வொரு வருடமும் ஸ்ரீராமநவை விழா பத்ராத்ரி ராமர் கோவிலில் நடைபெறுவது வழக்கம்.  தற்போது தெலுங்கானா சார்பில் பத்ராத்ரி ராமர் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.    ஆந்திர மாநிலம் சார்பாக கடப்பாவின் ஒண்டிமிட்ட பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.  பழமை வாய்ந்த இந்த கோவில் திருவிழாவை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

நடைபெற்று வரும் விழவில் நேற்று முன் தினம் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.   அந்த விழாவில் மனைவியுடன் கலந்துக் கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சார்பில்பட்டு வஸ்திரங்களை காணிக்கை அளித்தார்.   இந்த விழாவை ஒட்டி ஊரெங்கும் தற்காலிக பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.   மின்விளக்கு அலங்காரங்களுடன் பந்தல் ஜொலித்து வந்தது.

நேற்று இரவு திடீரென சூறாவளியுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.    கூடி இருந்த பக்தர்கள்  அங்குமிங்கும் ஓடினார்கள்.   தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பந்தல் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.   தள்ளுமுள்ளுவில் சிக்கியதால் ஒருவர் மரணம் அடைந்தார்.   மின்சாரம் தாக்கி இருவர் மரணம் அடைந்தனர்.

மொத்தம் 4 பேர் மரணம் அடைந்த நிலையில் படுகாயத்துடன் 52 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.  இவர்களில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

முதல்வர் சந்திரபாபு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.   இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.  மேலும் காயம் அடைந்தோரையும் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார்.