ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது இப்படம் .

இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின், தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் நடிக்கப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

மெர்லபாகா காந்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. ஜூன் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.