ஜாப்: பாகிஸ்தானில் நூறாண்டு பழமையான ஒரு இந்து கோயிலை அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் 7ம் தேதி நடைபெற்றது.  பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானின் ஜாப் நகரில் அமைந்துள்ள ஒரு நூறாண்டு பழமையான இந்து கோயில் அங்குள்ள இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாபு மொஹலா ஜாப் இல் இது தொடர்பாக ஒரு விழா நடைபெற்றது. விழாவில், ஜாப் துணை ஆணையர், தல்ஹா சலீம், கதீப் ஜாமியா மஸ்ஜித் மௌல்வி அல்லாஹ் தாத் கக்கர் மற்றும் இந்து சமூகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் போது துணை ஆணையர் அந்தக் கோவிலின் சாவியை அங்குள்ள இந்து சமூகத்தைச் சேர்ந்தவரிடம் ஒப்படைத்தார்.  இந்நிகழ்ச்சியில் பேசிய துணை ஆணையர் கோயிலுக்குள் ஒரு தொடக்கப்பள்ளி இருப்பதாகவும் இது எதிர்காலத்தில் சரியான இடத்திற்கு மாற்றப்படும் என்றும் கூறினார்.

மௌலவி அல்லாஹ் தாத் கக்கர் விழாவில் உரையாற்றும் போது கூறியதாவது: “கோயிலின் சாவியை அந்த சமூகத்திடம் ஒப்படைப்பது என்பது, பாகிஸ்தானில் அனைத்து மதங்களின் பேரிலும் சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருக்கட்டும்.  ஜாப் சமூகத்து மக்கள் அனைத்து மதங்களையும் மதிப்பதில் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.