சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பாமக சார்பில் அக்கட்சியின் எம்.பி. அன்புமணி ராமதாஸ்தனது ஒரு மாத சம்பளமான  ரூ.1.9 லட்சத்தை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள  மருத்துவ நெருக்கடியும் நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களை காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களை தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஈகையும் இரக்கமும் கருணையும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கைகொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் மே 11ஆம் தேதி வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, அரசியல் கட்சியினர், சிறு பெரும் நிறுவனங்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்த அளவிலான கொரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், பாமக சார்பில்,   கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, தநது ஒரு மாத ஊதியமான ரூ.1லட்சத்துக்கு 9ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார், ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ்.