சென்னை:
திருச்சி மாவட்ட தி.மு.க மூன்றாக பிரிக்கப்பட்டு, உதயநிதி ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது திமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் (ஜனவரி) 27ந்தேதி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மாவட்டச் செயலாளராக கோலோச்சி வந்த நேரு, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, திமுக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது திருச்சி மாவட்டச் செயலாளர்களாக உதயநிதி ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி,
திருவெறும்பூர் – மணப்பாறை – திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய, திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக அன்பில் மகேஷ் எம்எல்ஏ நியமனம்.
முசிறி – துறையூர் – மணச்ச நல்லூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய, திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் காடுவெட்டி தியாகராஜன் நியமனம்.
திருச்சி மேற்கு – திருவரங்கம் – லால்குடி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய, திருச்சி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக வைரமணி நியமனம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.