சென்னை:

யனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேல் ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டநிலையில், 16 பேர் சிறையிர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 15 பேர் குற்றவாளிகள் என்றும், ஒருவரை நிரபராதி என்றும்  தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த வழக்கு சென்னையில் உள்ள போக்சோ நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில்  நடைபெற்று வந்தது. குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 – பி, 366 (பாலியல் வன்கொடுமை), 376 – ஏ பி (காயமேற் படுத்துதல்), 376 பி டி ( கூட்டு பாலியல் வன்கொடுமை) 307 (கொலை முயற்சி), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழும், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாரை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் 10 மற்றும் 12-வது பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதவிர, 12 வயதுக்குக் குறைவான சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தின் புதிதாக நிறை வேற்றப்பட்ட பிரிவுகளின் கீழும் குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணை கடந்த டிசம்பர் 6 -ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தீர்ப்பை நீதிபதி   மஞ்சுளா அறிவித்தார்.

அதன்படி,  16 பேரில் 15 பேர் குற்றவாளி எனவும், தோட்டக்காரரான குணசேகர் என்பவர் நிரபராதி என்று கூறி, அவரை மட்டும் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. தண்டனை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்பட வில்லை. விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

குற்றம் சாட்டப்பட்டவர்கள் விவரம்:

ரவிகுமார் (56), சுரேஷ் (32), ராஜசேகர் (48), எரால் பிராஸ் (58), அபிஷேக் (28), குமரன் (60), முருகேசன் (54), பரமசிவம் (60), ஜெய்கணேஷ் (23), பழனி (40), தீனதயாளன் (50), பாபு (36), ராஜா (32), சூர்யா (23), குணசேகரன் (55), ஜெயராமன் (26), உமாபதி (42)