சென்னை’

ரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனந்த புரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படுகிறது.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இரவு 8.10 மணிக்கும், கொல்லத்திலிருந்து தினமும் மாலை 3.40 மணிக்குச் சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.  வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றி இயக்கப்பட உள்ளது. ,

இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்குப் பதிலாக 20 நிமிடத்துக்கு முன்னதாக இரவு 7.50 மணிக்குப் புறப்படும்.

இந்த ரயில் திருச்சிக்கு நள்ளிரவு 1.30 மணிக்குப் பதிலாக 1.05 மணிக்கும், மதுரைக்கு அதிகாலை 3.50 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கும், நெல்லைக்குக் காலை 6.30 மணிக்குப் பதிலாக 6.05 மணிக்கு சென்றடையும். கொல்லத்துக்கு மறுநாள் காலை 11.40 மணிக்குப் பதிலாக 11.15 மணிக்கு சென்றடையும்.

இதே ரயில் கொல்லத்தில் இருந்து மதியம் 3.40 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக 50 நிமிடம் முன்னதாக மதியம் 2.50 மணிக்குக் கொல்லத்திலிருந்து புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் காலை 6.05 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.