ரஜினியை வைத்து பாரதிராஜா படம் எடுத்தது ஏன் ?  : ஆனந்தராஜ் கேள்வி

சென்னை

ஜினியை கர்நாடக தூதுவன் என சொல்லும் பாரதிராஜா ரஜினியை வைத்து படம் எடுத்தது ஏன் என நடிகர் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பினார்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் போக்கை கண்டித்து ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர் ஒருவ்ர் காவலர்களை தாக்கினார்.  இதற்கு ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு கருத்து ஒன்றை பதிந்தார்.   அதற்கு இயக்குனர் பாரதிராஜா ரஜினிகாந்தை கர்நாடக தூதுவன் என விமர்சித்தார்.

இன்று காலை நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ஆனந்தராஜ் அரைமணி நேரம் சந்தித்து பேசினார்.  அதன் பிறகு இல்லத்துக்கு வெளியே அவர் செய்தியாளகளிடம் உரையாடியார்.  அப்போது ஆனந்தராஜ், “ரஜினி தமிழகம் மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.   இங்கிருந்து அவரை பிரித்து பார்ப்பது தவறு,   சிலர் ரஜினியை வேண்டும் என்றே கார்னர் செய்கிறார்கள்.   அவர்கல் எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்பது விரைவில் நமக்கு தெரிய வரும்.

தற்போதுள்ள கர்நாடக அரசியல் சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என எனக்கு தோன்றுகிறது.   இயக்குனர் பாரதிராஜா  ரஜினியை கர்நாடக தூதுவன் என கூறி வருகிறார்.   அப்படியானால் இவர் ஏன் ரஜினியை வைத்து படம் எடுத்தார்?   ரஜினிகாந்த் நடித்த படத்துக்கு பாரதிராஜா எதற்காக கொடி பறக்குது என பெயர் வைத்தார்.  பரதேசி என ஏன் வைக்கவில்லை?”  எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
English Summary
Anandaraj asked Why bharathiraja made films with Rajinikanth