அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை பல்லை பிடுங்கி சித்ரவதை செய்ததாக ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது இதனையடுத்து முதல்வரின் உத்தரவின் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தவிர, விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்களின் பல்லை அரைத்து விட்டதோடு அவர்களை கைவிலங்கிட்டதாகவும் புகார் எழுந்தது.
இந்த நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்-கிடம் விசாரணை நடத்தி ஒருமாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட சிறுவர்களை சித்ரவதை செய்த ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்