
அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் ‘பிங்க்’ இயக்குநர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குலாபோ சிதாபோ’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் சேவையில் ஜூன் 12 அன்று நேரடியாக வெளியாகிறது।
ஒரு படத்தை எடுத்து முடித்தவுடனே அதை வெளியிட்டுவிடும் கெட்ட பழக்கம் தனக்கு இருப்பதாக இயக்குநர் ஷூஜித் சிர்கார் கூறியுள்ளார்। ஏப்ரல் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது।
ஏற்கெனவே தனது ஒரு படம் இப்படி தாமதமாகி, வெளியாகாமல் போனதால், டிஜிட்டலில் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் சிர்கார்। ஜூன் 12 அன்று 200 நாடுகளில் அமேசான் ப்ரைம் தளத்தில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்।
Patrikai.com official YouTube Channel