ராஜமுந்திரி:

புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸும் ஜவஹர்லால் நேருவுமே காரணம் என பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா கூறியுள்ளார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் தாக்கப்பட்டு உயிர்தியாகம் செய்த சம்பவத்துக்கு பிரதமர் மோடியே பொறுப்பு என்று காங்கிரஸ் கட்சி அரசியலாக்கப் பார்க்கிறது.

காஷ்மீர் பிரச்சினையை ஜவஹர்லால் நேரு தவறாகக் கையாண்டதே இவ்வளவுக்கும் காரணம். சர்தார் வல்லபாய் பட்டேலை பிரதமராக்கியிருந்தால், காஷ்மீர் பிரச்சினையை தீர்த்து வைத்திருப்பார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே அமைதியை ஏற்படுத்தியிருப்பார்.
தேசியத்தைப் பற்றியோ, தேசப் பற்றைப் பற்றியோ காங்கிரஸ் கட்சி எங்களுக்கு கற்றுத் தரவேண்டிய அவசியம் இல்லை.

பாகிஸ்தான் பிரதமர் பதவியேற்பின்போது, பாகிஸ்தான் ராணுவ தளபதியை பஞ்சாபில் அமைச்சராக இருக்கும் சித்து கட்டித் தழுவினாரே. அப்போது காங்கிரஸ் மவுனமாக இருந்தது ஏன்? என்று கேள்வி எழுப்
பினார்.