கோவை
தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட மக்களவை தொகுதிகளில் எதுவும் குறையாது என அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
இன்று கோவை பீளமேட்டில் இன்று (புதன்கிழமை) காலை பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மேலும் மாலை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு 8.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார்.
கோவை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா,
“தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது. விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும். தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும், தொகுதி குறைய வாய்ப்பு இல்லை. நான் இங்கு உண்மையை கூறி உள்ளேன், நீங்கள் கட்டாயம் எனக்கு பதில் அளிக்க வேண்டும்
பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார். மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பது பொய்யான தகவல்.
பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது.
தமிழ் மக்கள் வளர்ச்சி, பண்பாட்டிற்கு உழைக்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும்”
என்று உரையாற்றியுள்ளார்.