டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்தே பணிகளை தொடர்வார் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

ஆகஸ்டு 2ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா  இருப்பது உறுதியானது. அதன்பிறகு, மருத்துவர்களின் ஆலோசனையின் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனாவில் இருந்து அமித்ஷா குணமடைய பலரும் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் தமது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்திருப்பதாக அமித் ஷா கூறி இருந்தார்.

ஆனாலும் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் உள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார் என்று உள் துறை அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளார். இது குறித்து அவர்கள் கூறி இருப்பதாவது: அமித்ஷா நலமுடன் உள்ளார். சிறப்பு கவனிப்பும் தேவைப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தே பணிகளை தொடர்ந்து கவனிப்பார் என்று கூறி உள்ளனர்.