க்னோ

உத்தரப்பிரதேச மாநில அரசு கொரோனா பரவலையும் பொருட்படுத்தாது சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்து  வருகிறது. 

 

நாடெங்கும் கொரோனா இரண்டாம் பரவலால் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.   குறிப்பாகக் கடந்த சில நாட்களாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் நான்காம் இடத்தில் உள்ள இம்மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 32 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த காலகட்டத்தில் சார்தாம் யாத்திரையை அரசு நடத்துவது வழக்கமாகும்.   சார்தாம் என்பது கேதார்நாத், பத்ரிநாத் , யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய நான்கு புண்ணிய தலங்களை குறிக்கும்.   இந்த வருடத்துக்கான மே மாதம் 14 அன்று தொடங்க உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவலை முன்னிட்டு கூட்டம் கூடுவதைத் தடுக்க  அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.  மேலும் திரை அரங்குகள், வணிக வளாகங்கள், முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட இடங்களும் பல மாநிலங்களில் மூடப்பட்டுள்ளன.   இந்நிலையில் உத்தரப்பிரதேச அரசு இந்த புனித யாத்திரையை நடத்துவதற்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.