வியட்நாம் போரை விட  கொரோனாவில் , அமெரிக்கா இழந்தது அதிகம்..

கம்யூனிஸ்ட் நாடான வியட்நாம் நாட்டுடன் அமெரிக்கா நடத்திய யுத்தம், மிகவும் பிரசித்தம்.

வியட்நாமுடன் 1955  ஆம் ஆண்டு முதல் 75 ஆம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகள் அமெரிக்கா போர் புரிந்தது.

அந்த போரில் அமெரிக்கா 58 ஆயிரத்து 220 வீரர்களை இழந்திருந்தது.

20 ஆண்டு போரில் இழந்ததைக் காட்டிலும், கொரோனாவுக்கு அமெரிக்கா அதிக எண்ணிக்கையில் பொது மக்களை இழந்துள்ளது என்ற தகவல் அந்நாட்டுப் பிரஜைகளைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆம்.

கொரோனாவுக்கு இதுவரை அமெரிக்காவில் 60 ஆயிரத்து 111 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை இத்துடன் நிற்கப்போவதில்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

கொரோனாவால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் , எண்ணிக்கையில் இது மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகம்.

– ஏழுமலை வெங்கடேசன்