ஹூஸ்டன்:

புதிதாகப் பிறந்த 10வார குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டனர். பிரேத பரிசோதனையில் அந்த பச்சிளங்குழந்தையின் உடலில்  96 எலும்பு முறிவுகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

பெற்ற மனம் பித்து என்ற முதுமொழிக்கு ஏற்ப அந்த பெற்றோர்களின் செயல் அமைந்துள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது  ஹுஸ்டன் மாநகரம். இங்கு வசித்து வந்த ஜேசன் பால் ராபின், (வயது 24), கத்ரினா வைட் (வயது 21)  கடந்த 10 வாரங்களுக்கு முன்பு  பிரசவ காலத்திற்கு முன்பே அழகான பெண் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக 12 நாட்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற நிலையில்  குழந்தையுடன் தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த குழந்தை கடந்த 15ந்தேதி திடீரென மரணம் அடைந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அந்த பச்சிளங்குழந்தையின் மண்டை ஓடு உடைக்கப்பட்ட நிலையில் மேலும் 90க்கும் மேற்பட்ட இடங்களில் எலும்பு முறிவு இருந்தது தெரிய வந்தது.

அந்த குழந்தை  விலா எலும்பு உள்பட  பல எலும்பு முறிவுகளை சந்தித்து உள்ளது. 71 விலா எலும்பு முறிவுகள் -மற்றும் 23 “நீண்ட எலும்பு” முறிவுகள் உள்பட 96 எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து அந்த குழந்தையின் பெற்றோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஹாரிஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.  அவர்களது குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணையில், ராபின் கோபக்காரர் என்றும், தனது கோபத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில்  உளவியல் புத்தகங்களைப் படித்து வந்தாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தையின் பெற்றோர் மனநிலை பாதிக்கப்பட்டு, குழந்தையை கொடூரமாக அடித்து கொன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பெற்றோரே தங்களது பச்சிளங்குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.