வேலூர்:
ஆம்பூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா (வயது 52) உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராக பதவி வகித்துவந்த அஸ்லம் பாஷா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைக்கான தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று ஆம்பூர் எம்எல்ஏ ஆக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாரை இயற்கை எய்தியாக கூறப்படுகிறது. அஸ்லம் பாஷாவுக்கு மனைவி, மகன் உள்ளனர்.
அஸ்லம் பாஷாவின் மறைவிற்கு அரசியல் கட்சிகள், மனிதநேய மக்கள் உள்பட இஸ்லாமிய அமைப்புகள், வக்பு வாரிய அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Patrikai.com official YouTube Channel