தென்காசி:  அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம்  தொகுதியில் போட்டியிடும், வேட்பாளர் இசக்கி சுப்பையாவின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாக்காளர்களுக்கு கொடுக்கும் வகையில், பணம் மற்றும் இலவச பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலைத்தொடர்ந்து, இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி,  அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர் பாட்டியல் அறிவித்து, . வேட்புமனு தாக்கல் செய்வது வருகின்றனர்.  கட்சித்தலைவர்க, மற்றும் அமைச்சர்கள் பலரும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.

இந்தநிலையில், அதிமுக சார்பில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று, சேரன் மகாதேவி சார் ஆட்சியர் பிரதிக் தயாளிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவில் அவருக்கு ரூ.240 கோடி உள்ளதாக  குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, அவரது நண்பர் மாரிச்செல்வம் வீட்டில் நள்ளிரவில் வருமான வரித்துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கப்பட்டிருப்பாதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இசக்கி சுப்பையாவின் சொத்து விவரங்கள் குறித்து காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…

Affidavit-Esakki subaiha