இதுவரை நடிகையாக மட்டும் இருந்த அமலாபால் முதல்முறையாக ஒரு படத்தை தயாரிக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு அமலா பால் புரொடக்ஷன்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்.

அவர் தயாரிக்கும் முதல் படம் கேடவர். இதனை அனூப் எஸ்.பணிக்கர் இயக்குகிறார். ஃபாரன்ஸிக் பின்னணியில் இந்தப் படம் தயாராகிறது. இதில் ஃபாரன்ஸிக் சர்ஜனாக அமலா பால் நடிக்கிறார்.

இன்று அமலா பாலின் பிறந்தநாளை முன்னிட்டு கேடவர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதில் மார்ச்சுவரியில் பிணங்களுக்கு நடுவே அமர்ந்து அமலா பால் உணவருந்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.