பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்ட படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் சாதனையும் படைத்தது.
அந்தவகையில் இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. கலைப்புலி எஸ்.தாணு மற்றும் சுரேஷ் பாபு இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷ் , மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிகை பிரியாமணி நடிக்கிறார். தமிழில் அசுரன் என்ற டைட்டிலில் வெளியான நிலையில் தெலுங்கில் நரப்பா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்தப் படத்தில் நடிகை அமலாபாலும் இணைந்துள்ளார். இவர், தனுஷை காதலிப்பவராக நடித்த அம்மு அபிராமி கேரக்டரில் நடித்து வருகிறார்.