இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலாபால், சமீபத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.
இப்போது முன்பைவிட தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.
அவரது பிரிவுக்குக் காரணம் என்று கிசுகிசுக்கப்படும் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கும் ‘வட சென்னை’ படம்தான்.
இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அமலாபால்.
அதோடு, “திருட்டு பயலே” இரண்டாம் பாகம், கன்னடத்தில் “ஹெப்புலி”, பெயரிடப்படாத இரண்டு தெலுங்கு படங்கள் என்று ஏக பிஸியாகிவிட்டார் அமலாபால்.