ஊட்டி:
சென்னையில் இருந்து கோடை விடுமுறைக்காக கோத்தகிரியில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு சென்ற பிரபல நடிகர் ராதாரவி, கொரோனா சோதனை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து, கொரோனா பரிசோதனை தொடர்பான முடிவே இன்னும் வராத நிலையில், வதந்திகளை பரப்புகிறார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிஇடங்களில்சிக்கிக்கொண்டவர்கள், தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல இ.பாஸ் பெற்றுக்கொண்டு செல்லலாம் என தமிழகஅரசு அறிவித்தது. இதையடுத்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ராதாரவியும், கோடையை சமாளிக்க குடும்பத்தினருடன் கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு இ-பாஸ் வாங்கிப் பயணித்துள்ளார்.
சென்னையிலிருந்து வந்திருப்பதால் கோத்தகிரியில் ராதாரவி உள்பட அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை வழங்கப்படி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ராதாரவிக்கு கொரோனா, அவர் கோத்தகிரியில் தனிமைப்படுத்தப்பட்டார் என்று செய்திகள் பரவின. பல ஊடகங்களும் இதை உறுதி செய்வதுபோல செய்திகள் வெளியிட்டன.
இந்த நிலையில், ராதாரவி இருகுறித்து விளக்கம் அளித்துள்ளார். “நான் ஒய்வெடுக்கலாம் என்று கோத்தகிரி வந்தேன். ஓய்வு என்பது தனிமைதானே. ஆகையால் கோத்தகிரியில் ஓய்வெடுத்து வருகிறேன். தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே பாரதிராஜா தனது சொந்த ஊரான தேனிக்குச் சென்றது பெரும் சர்ச்சையாக உருவானது. அதற்கு அவர் விளக்கமும் அளித்தது குறிப்பிடத்தக்கது.