நான் கோவக்காரனா.. நான் கோவக்காரனா?” செய்தியாளரிடம் ஆத்திரத்தைக் கொட்டிய  அரசியல் பிரமுகர்

Must read

 

 

 

திரைப்படம் ஒன்றில் வரும் நகைச்சுவைக்காட்சி:

“சார், கோபப்படதீங்க..”

“என்னது.. நான் கோபப்பட்டேனா.. கோபப்ட்டேனா..” என்று கோப்படும் ஒரு கதாபாத்திரம்.

இதே போல நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்துவிட்டது.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அந்த அரசியல் பிரமுகர். .

சந்திப்பு முடிந்த பிறகு, ஒரு செய்தியாளர் அவரிடம் தனிப்பட்ட முறையில்,  “நான் உங்கள் மீது மிகுந்த அபிமானம் கொண்டவன். அதனால் ஒரு வேண்டுகோள்… சமீப காலமாக செய்தியாளர்களிடம் அதீதமாய் கோபப்படுகிறீர்கள். இதைக் குறைத்துக்கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

உடனே ஆவேசமான அந்த அரசியல் பிரமுகர், “நீ எனக்கு அறிவுரை கூறுகிறாயா?  நீ எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறாய்” என்று மிரட்டலாக கேட்க.

அவரும் சொல்ல..

உரத்த குரலில் அந்த அரசியல் பிரமுகர், “எனக்கு எதிராகத்தானே  எல்லோரும் செய்தி போடுகிறீர்கள்..” என்றவர், எல்லோரையும் பார்த்து, “நான் கோபப்படுகிறேன் என்கிறார் “..” நிறுவனத்தைச் சேர்ந்த ”…” செய்தியாளர்” என்றவர், மீண்டும் ஆத்திரமாக, “சொல்லுங்க.. நான் கோவக்காரனா.. கோவக்காரனா” என்று கோபப்பட..

“இதுக்கும் கோபப்படுகிறாரே இந்த பிரமுகர்..” என்று ஆச்சரியப்பட்ட செய்தியாளர்கள், “புத்தாண்டு அதுவுமா இப்படியா துவங்கணும்” என்று புலம்பியபடியே கிளம்பினர்.

More articles

Latest article