சென்னை: தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றும்,  அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பாரதியஜனதா கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன. இதனால் மாநிலம் முழுவதும அரசியல் கட்சிகளின் கொடி, தோரணங்கள் காணப்படுகின்றன. ஆட்சியை பிடிக்கும் ஆசையில், திமுக அதிமுக மட்டுமின்றி, பாஜக உள்பட பல  கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, அவ்வப்போது கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை பேசி, சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  “அதிமுகவை யாரும் நிர்பந்திக்க முடியாது என்று பாஜகவுக்கு பதில் கூறியவர், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை; தனிப்பெரும்பான்மையுடன் தான் அதிமுக ஆட்சி அமையும்!”  என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி . அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும் கறாராக தெரிவித்து உள்ளார்.

2021ம் ஆண்டு  நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7ம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.