சென்னை: சமுக ஆர்வலர் ஜகபர் அலி கனிமவள கொள்ளையர்களால், லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே தூத்துக்குடியில் மணல்கொள்ளையை அடுத்த அரசு அதிகாரி, அலவலகத்திற்குள்ளேயே வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டதுடன், முறைகேடுகளை தடுக்கும் பல அதிகாரிகள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்த்தில் கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி நேற்று முன்தினம் லாரியைக்கொண்டு ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
இவரது மரணம், முதலில் இது விபத்து என கூறப்பட்ட நிலையில், பின்னர், அது கொலை என்பது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் லாரி டிரைவர் உள்ப 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், நடந்தது விபத்து அல்ல என்றும் கல் குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து சந்தேதகத்துக்குரியவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 15நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமுக ஆர்வலர் கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முறைகேடுகளை தடுக்கும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் இதுவரை அரசு ஆதரவாளர்கள் மற்றும் ஆளும் கட்சியினரால் தாக்கப்பட்ட நிலையில், தற்போது சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்டு இருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எப்போதும்போல, இந்த வழக்கிலும் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படு வார்கள் என உறுதியளித்துள்ளார். ஜெகபர் அலி கொலை வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள், கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யபட்டனர் என்று கூறியவர், இதுகுறித்து விமர்சனம் செய்த முன்னாள் முதலமைச்சராக இருந்த பழனிசாமியை சாடினார். அவர் அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அவதூறு பரப்புகிறார் என்று குற்றம் சாட்டி உள்ளார்.
லாரி ஓட்டிச்சென்ற லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிப்படை புரிதல்கூட இல்லாமல் இவ்வாறு அவதூறு பரப்பலாமா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையே டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர்தானே என்று கடந்து போக வேண்டுமா?’ என்று பதிவிட்டுள்ளார். புதுக்கோட்டை அதிமுக முன்னாள் கவுன்சிலர் திரு. ஜெபகர் அலி உயிரிழந்த சம்பவத்தில் முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.