டெல்லி: போபால் டெல்லி வந்தே பாரத் ரயிலில் திடீர் தி விபத்து ஏற்பட்டது. இதையடுத்த, ரயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நாடு முழுவதும் வந்தே பாரத் அதிவேக ரயில் சேவையை மத்தியஅரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், போபாலில் இருந்து டெல்லிக்கு இன்று காலை  சென்று கொண்டிருந்த ரயில்,  குர்வாய் கெத்தோரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், ரயிலின்  ஒரு பெட்டியில்  உள்ள பேட்டரியில்,  திடீரென தீப்பிடித்தது.  இதைக்கண்ட ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். ரயில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த ரயில் விபத்து சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ரயிலின்  ஒரு பெட்டியில் தீ எரிவது தெரிந்தது. சிலர் அங்கு தீயை அணைக்க முயற்சிப்பதையும் காண முடிந்தது.

பல்வேறு வசதிகளை கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2019ஆம் ஆண்டு பிப். 15ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. டெல்லி – வாரணாசிக்கு இடையே முதன்முதலில் இந்த ரயில் இயக்கப்பட்டது. தற்போது 25 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை – மைசூர், சென்னை – கோவை ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

வீடியோ உதவி: நன்றி – பிடிஐ