டில்லி:
பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை எந்தவொரு மாணவர்களையும் பெயிலாக்கக்கூடாது என்பதால், பெரும்பாலான அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் சரிவர பாடம் சொல்லிக்கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தனர்.
தற்போது மத்திய அரசு 8வது வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்ற அந்த உத்தரவை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த வேண்டும் என நோக்கில், 8வது வகுப்பு வரை படிக்குமா மாணவ மாணவிகளை பெயில் செய்யக்கூடாது, அனைவரையும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய, தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும் பாஸ் என்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஒழுங்காக படித்து பரீட்சை எழுதினால் மட்டுமே பாஸ் செய்ய முடியும்.
முதல் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்யும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகிறது.
மாணவர்களுக்கு எப்படியும் அரசு விதிகள்படி பாஸ் போட்டுவிடுவோம்… அதனால் அவர்களுக்கு ஏன் பாடம் சொல்லி தர வேண்டும் என ஏனோதானோ வென்று அரசு பள்ளிகள் ஆசிரியர்கள் பலர் தங்களது பணியை சரிவரி செய்யாமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்கள்.
இதன் காரணமாக 8ம் வகுப்புவரை படித்தும் பல மாணவர்கள் எழுதப்படிக்க தெரியாத நிலையே தொடர்கிறது.
இதனையடுத்து கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், நாடு முழுவதும் சர்வதேச தரத்திலான 20 கல்வி நிறுவனங்களை அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுதொடர்பான மசோதா விரைவில் பார்லி.,யில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.