டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங்குடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்தித்து, மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழகத்திற்கு வழங்கும் காவிரி தண்ணீரை தடுக்கும் நோக்கில், கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாக ஏமாற்றி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு அனைத்து  சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, மேகதாக அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றியது.

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக்கட்சி குழுவினர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் இன்று மதியம்  மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினர். அப்போது மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.