ஐதராபாத்:

104 செயற்கை கோள்களை வெற்றிகரமாக நிலை நிறுத்தியதன் மூலம் இஸ்ரோ உலக சாதனை படைத்துள்ளது.

இதில் பூமியை ஆய்வு செய்யும் ‘கார்டோ சாட் -2’ என்ற செயற்கைகோளும் அடங்கியுள்ளது. இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் தலா ஒரு நானோ செயற்கைகோள், அமெரிக்காவில் 96 செயற்கைகோள், இந்தியாவின் 2 நானோ செயற்கைகோள்கள் இதில் அடங்கும்.

இதில் அமெரிக்காவை சேர்ந்த பிளானட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 88 செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புற £க்கள் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள்கள் பூமியை படம்பிடிக்கும் பணிகளை மேற்கொள்ளும். தினமும் பூமியின் புகைப்படங்களை இது அனுப்பும். இனி பூமியின் அனைத்து பகுதிகளையும் தினமும் புகைப்படம் எடுக்க முடியும்.

பிளானட் நிறுவனம் தனது வெப்சைட்டில் ‘‘பூமியின் அனைத்து பகுதிகளையும் தினமும் படம் எடுக்க 2011ம் ஆண்டில் இலக்கு நிர்ணயம் செய்தோம். உலகின் மிகப் பெரிய இந்த சவாலை சந்திக்க சாதகமாக சூழ்நிலை ஏற்பட்டது. இதற்காக 100 முதல் 150 செயற்கைகோள்கள் வரை விண்ணில் நிலை நிறுத்த முடிவு செய்தோம். தற்போது 144 செயற்கைகோள்களை எங்கள் நிறுவனம் விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் எங்களது மைல் கல்லை எட்டியுள்ளோம்’’ என தெரிவித்துள்ளது.

இந்த புவி படம் எடுத்தலில் பல செயலிகள் உள்ளது. உதாரணமாக விவசாய துறையில் அரசு, ஆராய்ச்சியாளர்கள், அமைப்புகள் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘காடுகளை பாதுகாக்க இந்த புவி பட செயற்கைகோள் உறுதுணையாக இருக்கும். மரம் அதிகம் உள்ள பகுதிகளை தினமும் படம் பிடிப்பதால், மரங்களின் எண்ணிக்கை குறையும் பகுதிகளை அடையாளம் காண முடியும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவதை கண்டுபிடித்து, அந்த பகுதிக்கு நேரடியாக சென்று தடுக்கும் நடவடிக்கையில் இறங்கலாம்’’ என பிளானட் நிறுவன இயக்குனர் மைக் சஃப்யான் தெரிவித்துள்ளார்.