மும்பை

ந்த ஆண்டுக்கான அனைத்து ஹஜ் பயணங்களும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதினாவுக்கு பயணம் செய்வது ஹஜ் என அழைக்கப்படுகிறது.   மெக்கா மற்றும் மதினா சௌதி அரேபிய நாட்டில் அமைந்துள்ளது.   இஸ்லாமியர்களுக்கு இது மிகவும் முக்கியமானதாகும்.   ஒவ்வொரு வருடமும் இந்திய ஹஜ் கமிட்டி இஸ்லாமியர்களைத் தேர்வு செய்து அனுப்பி வைக்கிறது.  

இந்நிலையில் இன்று இந்திய ஹஜ் கமிட்டி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்,

சவுதி அரேபிய அரசின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் கொரோனா பெருந்தொற்று காரணமாகச்  சவுதி அரேபியாவில் உள்ளவர்களை மட்டுமே ஹஜ் பயணத்துக்கு அனுமதித்துள்ளது.   சர்வதேச ஹஜ் பயணத்தை அரசு ரத்து செய்துள்ளது.

எனவே இந்திய ஹஜ் கமிட்டி 2021 ஆம் வருடத்துக்கான அனைத்து ஹஜ் பயணங்களையும் ரத்து செய்கிறது

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.