புதுச்சேரி

புதுச்சேரி அரசு கொரோனா ஊரடங்கில் மேலும் சில புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

 

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகமடைந்ததையொட்டி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது  இதையொட்டி ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இன்று புதுச்சேரியில் 355 பேர் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிர் இழந்து 629 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதையொட்டி புதுச்சேரி அரசு கொரோனா ஊரடங்கில் மேலும் சில புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

அவை பின் வருமாறு

  • உணவகங்களில் மாலை 5 மணி வரை 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதி
  • தேநீர்க்கடைகள், பழச்சாறு கடைகள் ஆகியவற்றுக்கு மாலை 5 மணி வரை அனுமதி
  • கேளிக்கை விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மாலை 5 மணி வரை அனுமதி
  • மதுபான விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து மது அருந்த மாலை 5 மணி வரை அனுமதி
  • தனியார் நிறுவனஙக்ள் மற்றும் அலுவலகங்களில் மாலை 6 மணி வரை ஊழியர்கள் பணி புரிய அனுமதி

பணிக்கு வரும் ஊழியர்கள் 100% பேரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.