பத்திரிகையாளர் ராம்சந்தர் கொலை வழக்கிலும் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி

Must read

பஞ்சகுலா:

சாமியார் குர்மித் ராம் ரஹீம் ஆசிரமத்தில் உள்ள பெண்களை பாலியல் பலாத் காரம் செய்து வந்ததாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ராம்சந்தர்  கொலை செய்யப்பட்ட வழக்கிலும்  சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தண்டனை விவரம் ஜனவரி 17ந்தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பலாத்கார குற்றச்சாட்டு காரணமாக சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் குர்மித்ராம் ரஹீமுக்கு மேலும் ஒரு கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளது.

அரியானா மாநிலத்தில் சிர்சா நகரில் தேரா சச்சா சவுதா என்ற பெயரில் ஆசிரமம் நிறுவி,  ஆன்மிகத்தை போதிப்பதாக கூறி இளம்பெண்களை சூறையாடி வந்த குர்மித் ராம்  இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஒருவரும் கொலை செய்யப்பட்டது  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு சிர்சா பகுதியை  பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்திரபதி மற்றும் தேரா இயக்கத்தின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் ஆகியோர் பலாத்கார சாமியார் ராம் ரஹீமின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில், சாமியார் குர்மித்ராம் ரஹீம் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்த நீதிமன்றம், அவர்களுக்கான  தண்டனை வரும் ஜனவரி 17ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என ஹரியாணா பஞ்ச்குலா நீதிமன்றம் கூறியுள்ளது.

More articles

Latest article