சென்னை.
பிரியாணி என்றாலே நாவில் நீர் ஊறிவிடும் பலருக்கு…. இன்றைக்கு ஒரு வெட்டு வெட்டிவிட வேண்டியதுதான் என்று ஆவலோடு இருப்பார்கள். பிரியாணியின் சுவைக்கு பலபேர் அடிமை…
இன்று தீபாவளி…. பல வீடுகளில்  மதிய உணவே  பிரியாணியாகத்தான் இருக்கும்…. நம் அன்றாட வாழ்கையில் பிரியாணியும் ஒரு அங்கமாக மாறிபோய் உள்ளது.
பிறந்தநாள் விழா, திருமண நாள் விழா, காதுகுத்து விழா போன்ற எந்த விழாவானாலும் பிரியாணி இன்றியமை யாததாகி வருகிறது.
பிரியாணியில் எத்தனையோ வகை….. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, வான்கோழி பிரியாணி, காடை பிரியாணி, இறால் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி, ராவுத்தர் தலப்பாகட்டு பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி
இப்படி எத்தனையோ பிரியாணிகளை பார்த்திருக்கிறோம்… சுவைத்திருக்கிறோம்…. ஆனால், பூனை பிரியாணி….. கேள்விப் பட்டிருக்கிறீர்களா… சாப்பிட்டிருக்கிறீர்களா…..  யாருமே இல்லை என்றுதான் சொல்லுவோம்…
ஆனால், ரோட்டோர கடைகளில் பிரியாணி சாப்பிடுபவராக இருந்தால்…. பூனைகறி பிரியாணியும் சாப்பிட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது….
briyani1
சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் ஓட்டல் உணவுகளை , அதிலும் சாலையோர உணவுகளை அதிகம் வாங்கி உண்ணுவது வழக்கம்.  அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் பிரியாணி செய்தி.
சென்னையில்  பல இடங்களில் பூனைக்கறியை ஆட்டுக்கறி என சப்ளை செய்து,  அதை  சாலையோர கடை வியாபாரிகள் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி, கறி குழம்பு தயாரித்து பறிமாரி உள்ளது தெரிய வந்துள்ளது.
நெற்குன்றத்தில் உள்ள வனவிலங்கு அமைப்பிற்கு ரகசிய தகவல் கிடைத்தையடுத்து, போலீசார் உதவியுடன் தாம்பரம் அருகே உள்ள மப்பேடு பகுதியில் பூனைகளை மொத்தமாக வளர்த்து வரும் நரிகுறவர் கும்பலை பிடிக்க சென்றபோது, தகவல் அறிந்து அவர்கள் எஸ்கேப் ஆயினர்.
ஆனால் பூனைகளை கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்த கூண்டு பூனையோடு கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், அந்த கும்பல் பூனைகளை மொத்தமாக வளர்த்து வருவதாகவும், மேலும் சென்னை முழுதும் பல இடங்களில் கூண்டுகளை வைத்து பூனைகளை நூற்றுக்கணக்கில் பிடித்து வந்து அவைகளை மொத்தமாக  கூண்டுக்குள் அடைத்து வைத்து,  தேவைகேற்ப அதை கொன்று,தோலை உரித்து, கறியாக்கி சாலையோர கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இவர்களிடம் இருந்து, பல்லாவரம் , குரோம்பேட்டை , பூந்தமல்லி மற்றும் கோட்டூர் புரத்தில் உள்ள சில ஹோட்டல்கள் வாடிக்கையாளர் களாக உள்ளனராம். ஆனால், பொதுமக்களுக்கு தெரியாமல் இன்னும் எத்தனை ஹோட்டல்களில் பூனை கறி பயன்படுத்தப்படுகிறதோ…..
ஆட்டுக்கறியின் விலை ஏறிக்கொண்டே இருப்பதால், ஆட்டுக்கறியை விட மிருதுவான பூனைக்கறியை ரூ.100 க்கு வாங்கி பிரியாணி, கறி குழம்பு வைத்து விற்கின்றனர். இது தவிர ரோட்டோர கடைக்காரர்களும் இந்த பூனை கறியை ரூ.110 க்கு ரெகுலராக வாங்கி விற்பனை செய்து வந்ததும், இதை நூற்றுக்கணக்கான பேர் ருசித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, காக்கா பிரியாணி சென்னை ரோட்டோர கடைகளில் விற்றது கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
cat-biryani
பூனை அடித்து கொன்று கறி சமைத்து சாப்பிடுவது குறித்து, வனவிலங்கு வாரிய உறுப்பினர் கூறியதாவது:
பூனை வனவிலங்கு பிரிவின் கீழ் வராததால் நாங்கள் எந்த தண்டனையும் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.
ஆனால்,  பூனையை நரிக்குறவர்கள் சாப்பிடுவார்கள் அதை யாரும் தடுக்க முடியாது , ஆனால் இது போல் பண்ணை போல் வளர்த்து வெட்டி விற்பனை செய்வது மிகப்பெரும் குற்றம்.
ஹோட்டல் மற்றும் சாலையோர கடைகள் சில இதை வாங்கி பயன் படுத்துவதும் குற்றம்.
இதை கண்காணித்து, தடுக்க வேண்டியத பொறுப்பு உணவு பாதுகாப்புதுறைக்கும், காவல்துறைக்கும்தான் உள்ளது என்று கூறினார்.
மேலும், பூனை கறி விற்றுவந்த கும்பல் தப்பிவிட்டதால், அவர்களை கைது செய்தால்தான், வேறு எந்தெந்த ஓட்டல்களுக்கு பூனை கறி சப்ளை செய்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரிய வரும் என்று கூறினார்.
சாலையோர உணவகங்கள் பாதுகாப்பு அற்றவை என்பது தெரிந்தும், கூலிவேலை செய்பவர்களும்,   வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் பேச்சுலர்கள், மற்றும் வீட்டில் சமைக்க முடியாதவர்கள்  வேறு வழியில்லாமல்  விலை குறைவு என்ற காரணத்ததால் சாலையோர கடைகளையே நாடுகிறார்கள்…
உழைப்பாளிகளின் வயிற்றிலும் அடிக்கிறார்கள் சாலையோர வியாபாரிகள்…
பொதுமக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்… இல்லையேல் பூனை, காககாக மட்டுமல்ல….. நாட்டில் அதிகமாக காணப்படும் நாய் கறி பிரியாணியும் விற்பனைக்கு வந்துவிடும் என்பதில் ஐயமில்லை…..
பூனை கறியை நரிகுறவர்கள் சாப்பிடுவது அவர்களது வழக்கம். அதேபோல் பூனை கறி – இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாக, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதாகவும் செய்திகள் உள்ளது.
இதுகுறித்து கருத்து கூறிய டாக்டர் ஒருவர்,  பூனைக்கறியும் மற்ற மாமிசம் போன்றது தான். நாம் அதை சாப்பிட்டு பழகவில்லை. அதனால் சிலருக்கு ஒவ்வாமை வரலாம். அவ்வளவுதான். வெளிநாடுகளில் பாம்பு கறி, தேள் கறி போன்ற புளு பூச்சிகளை எல்லாம் சாப்பிடுகிறார்கள்….
ஆனால் வியாபாரி ஒருவர் நுகர்வோரை ஏமாற்றுவது தண்டனைக்குறிய குற்றம் என்றார்.