மூடர் கூடம் படத்தின் புகழ் இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. இப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படம் வெளியீட்டிற்கு தயார் நிலையில், உள்ள போது, ஃப்ளாஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் இப்படத்தை வெளியிட தடை கோரியுள்ளார். இவர், விசாகனின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது.
சொர்ணா சேதுராமன், இயக்குனர் நவீனிடம் விசாகனை வைத்து படம் இயக்க ரூ.50 லட்சம் வரையில் முன்பணமாக கொடுத்துள்ளதாகவும் , படம் இயக்குவதாக கூறிவிட்டு, இயக்காமல், காலம் தாழ்த்தி வந்ததாக, இயக்குனர் நவீன் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
தற்கு பதிலளிக்கும் வகையில் நவீன் தயாரிப்பு தரப்பிடமிருந்து எந்தப்பிரச்சனையும் வராமல் இருந்திருந்தால் விசாகனின் படம் குறிப்பிட்ட தேதியிலேயே தொடங்கியிருக்கும். இப்படத்தின் கதைக்கும் விசாகனுக்கும் சொன்ன கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முற்றிலும் வேறுபட்ட கதை. இது விசாகனுக்கே தெரியும். எது எப்படியிருந்தாலும், என்னுடைய தரப்பில் நியாயம் இருக்கிறது. நிச்சயம் நீதி வெல்லும் என்று கூறியுள்ளார்.