மதுரை
உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கி உள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் போட்டி உலக அளவில் புகழ் பெற்றதாகும். இடையில் இந்த போட்டிக்கு மத்திய அரசு தடை விதித்ததால் தமிழகத்தில் கடும் போராட்டம் வெடித்தது. இதையொட்டி மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
மதுரையில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் புகழ்பெற்றதாகும். தற்போது கொரோனா கட்டுப்பாடு உள்ளதால் இந்த போட்டியில் பங்கு பெற இணையம் மூலம் மட்டும் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பலரும் விண்ணப்பித்துள்ளனர்.
அதில் இருந்து 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட 700 காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர். மேலும் கொரோனா அச்சுறுத்தலால் 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.