மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்த அபிசித்தர் என்ற வீரர், இந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையில், காளை முட்டியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளானா பொங்கலை ஒட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இதில் உலக புகழ்பெற்ற  மதுரை  அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

பொங்கல் தினமான  (ஜன.14) அவனியாபுரத்திலும், ஜன. 15 அன்று  பாலமேட்டிலும், போட்டிகள் நடைபெற்ற நிலையில், நேற்று (ஜனவரி 16) அலங்கா நல்லூரில், ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக, இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று வீதம் 9 சுற்றுக்களாக நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டி மாலை 6.15 மணியளவில் நிறைவடைந்தது. இதில் 20 காளைகளை அடக்கி அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார்.

அபி சித்தர் கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் இடமும், கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடமும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 

அபி சித்தர், பூவந்தி (G 72) – 20 காளைகளை அடக்கி முதலிடம்

ஶ்ரீதர், பொதும்பு (P 227) – 14 காளைகளை அடக்கி இரண்டாமிடம்

விக்னேஷ், மடப்புரம் (G 66) – 10 காளைகளை அடக்கி மூன்றாமிடம்

அஜய், ஏனாதி (G 80) – 9 காளைகளை அடக்கி 4வது இடம் ( காயம் காரணமாக விலகல்)

இந்த போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்ததபோது, பெரியசாமி (வயது 66) என்ற முதியவர்  மாடு சேகரிக்கும் இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளை எதிர்பாராத விதமாக பெரியசாமியின் கழுத்தில் குத்தியது. இதில் படுகாயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.  ஆனால், பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,   மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தமாக 76 பேர் காயமடைந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு! அமைச்சர் மூர்த்தி மீது டைரக்டர் ரஞ்சித் குற்றச்சாட்டு…

ஜல்லிக்கட்டு போட்டியில் அரசியல்: அமைச்சர் மூர்த்தி மீது அபிசித்தர் குற்றச்சாட்டு…

தனக்கே முதல் பரிசு: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2வது இடம் பிடித்த அபி சித்தர் வழக்கு