மதுரை: இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை  4-வதுசுற்று நிறைவு  பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் ஹைலைட்டாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் இரண்டு காளைகளும், மாடுபிடி வீரர்களிடம்  பிடிபடாமல் போக்குகாட்டியது. இன்றைய போட்டியின் போது,  15 பேர் காயம் அடைந்துள்ளனர்.

மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், இந்த போட்டியில் இரண்டு சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இன்றைய போட்டியில், பாலகிருஷ்ணன் என்பவர் 7 காளைகளை அடக்கி முதலிடத்திலும், அபி சித்தர், தவமணி ஆகிய இருவரும் தலா 4 காளைகளை இரண்டாவது இடத்தில உள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய நடிகர் சூரியின் மாடு பிடிபட்டது. அதே வேளையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் இரண்டு காளைகளும், மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டி, பிடிபடாமல் வெளியேறியது.  ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காகைளள் கெத்து காட்டியது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டவர்களில் இதுவரை  15 பேர் காயம்.  காயமடைந்துள்ளனர். அதன்படி மாடுபிடி வீரர் 8 பேரும், மாட்டின் உரிமையாளர் 6 பேரும்  பார்வையாளர் ஒருவர் உள்பட 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.